சிறுகுடியின் லைட் ஹவுஸ்
    
 முன்பு சிறுகுடியின் லைட்ஹவுசாகவும் பூங்காவாகவும் இது விளங்கியது. இந்தக்குட்டு வெளியூர்களிலிருந்து விருந்தினர்வந்திருந்தால் மாலைநேரம் வாக்கிங் இந்த குட்டுமேல் ஏறி  சிறுகுடியின் எழில்மிகு அழகை ரசிக்க அலைத்துசெல்வோம் சுற்றி மலைகளும் அதன் நடுவில் ஊர் சிறுகுடி இருப்பது கண்கொள்ளா காட்சியாகத் தெரியும்.

    இங்கு இருந்து பார்த்தால் 13km தூரம் உள்ள நத்தம்வரை தெரியும்.இந்த அழகிய கிராமத்தில் ஐந்து நண்பர்கள் அம்மான் ராமலிங்கம் ,ஜூனியர் மனோகர்,கல்லு ரமேஷ்,சுரக்காய் சுரேஷ்,அவரக்குளி செல்வம் இவர்களுடன் நட்புக்காக வந்துபோகும் குன்னாரம் மீனா,கரடி ரமேஷ் ஆகியோர் ஒருகுருப்.சனி,ஞாயிறு லீவு நாட்களில் இந்த குட்டுக்குச் சென்று அரிசி வெல்லம்எடுத்துச் சென்று கூட்டாஞ்சோறு ஆக்கிச் சாப்பிடுவோம். தீபாவளி நாட்களில் ஆளுக்கொரு துப்பாக்கி வைத்துக்கொண்டு அதில் ரோல்வெடி வைத்து திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடி ஒரு குருப் கொள்ளை கோஷ்டியாகவும் ஒருசிலர்  C.I.D போலீசாகவும்வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி ஜேம்ஸ்பான்ட் படம்போல் நடக்கும்.

   இங்குதான் எங்கள் அரசியல் மேடை பயிற்சி நடைபெற்றது. அன்றைய காலக்கட்டத்தில் அம்மானாகிய நான் எம்.ஜி.ஆர் தீவிர ரசிகன் (இன்றும்கூட) மனோ,சுரேஷ் தி.மு.க.பார்டி முதலில் நான் கலைஞரை தாக்கி பேசுவேன் பிறகு மனோ எம்.ஜி.ஆர். ஐ தாக்கி பேசுவோம் ஒருவர் பேசுவதை மற்றவர்கள் உட்கார்ந்து ரசித்து கேட்போம் இதில் சுரேஷ் பேசும்போது மாலை நேரங்களில் வெள்ளாளர் தெருவில் குடியிருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் தினசரி வாக்கிங் அணைமலை விளக்குவரை சென்றுவருவார்கள் ஒருநாள் மேடை பயிற்சியில்சுரேஷ் உணர்ச்சி வேகத்தில் அதோ சென்று கொண்டிருக்கிறானே, சொட்டதலையன் கருவாயன்.
3
    ஊத் துக்குளை என்று ஆசிரியர்களை நோக்கி திட்டிவிட்டான். மறுநாள் காலையில் பள்ளியில் பஞ்சாயத்து விசாரணை நடைபெற்றது. நாங்கள், ரமேஷை சொன்னோம் என்று கூறி தப்பிவிட்டோம். மேலும் இந்தகுரூப் குட்டுக்கு  கிழக்குபக்கம் ஊர்காவல்காரர் கருப்பையாஅம்பலம் காட்டில் வெள்ளரி போட்டிருப்பார். எங்கள் அணி கீலேறங்கி வெள்ளரிபிஞ்சு கைலியில் போடுவதற்குள் மாமா கருப்பையா அம்பலம் வீச்அரிவாளுடன் விரட்டிவருவார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் வருவதுபோல் செல்வம் விசிலடிக்க மின்னல் வேகத்தில் தரை இறங்கி தையா அம்மாயி வீட்டிற்குள் ஓடிஒளிந்து விடுவோம். தையா அம்மாயி என்னப்பா கருப்பையாஎன்று விசாரிப்பார். 
4
    மாப்பிள்ளைகள் வெள்ளரிபிஞ்சுகளை புடுங்கிட்டு போகிரார்கள் கண்டிதுவையுங்கள் என்று  கூறி சென் றுவிடுவார். இதுபோல் கோட்லா வீட்டு கணக்கன் கண்மாய் புளியமரத்தில் கரடி ரமேஷ்,குன்னாரம் மீனா இருவரும் குளிக்கசெல்வதுபோல் சென்று துண்டுநிறைய புளியம்பழம் அடித்து வெள்ளக்குட்டில்வைத்து ஓடு நீக்கி சின்னான் செட்டி கடையில் விற்று  சக்கரவல்லிகிளங்கு வாங்கி சாப்பிடுவோம் இப்படிஆடி விளையாடிய குட்டு இன்று தனியார் ஆக்கிரமிப்பால் பொழி விழந்து காணப்படுகிறது...    
 .
மறக்கமுடியுமா?.......மறக்கமுடியுமா?

உருவாக்கம் :முத்துராமலிங்கம்

செயல்வடிவம் :பருதி இளம்வழுதி

                   ÌÈ¢ôÒ:   ÀÊôÀмý ¿¢ýÚ Å¢¼¡¾£÷¸û ¿¢¸ú¨ÂôÀüÈ¢ ±í¸ÙìÌ þÃñÎ Å¡¢¸û ±Ø¾¢ «ÛôÒí¸û,

                                              «Ð§Å ±í¸ÙìÌ °ì¸ò¨¾ ¦¸¡ÎìÌõ .

BY

SWST

logo