தொடக்க காலத்தைப்பற்றி இப்படி வேறுபட்ட தகவல்கள். எப்படியோ அப்பாவைவிட ஆத்தா தான் குடும்பத்திற்கு உழைத்திருந்தார்.என்பது, பின்னாளில் இளையராஜாவே எழுதி இசை அமைத்து பாடிய "பொன்னைப்போல ஆத்தா" போன்ற பாடல்களில் வெளிப்பட்டது.
"பண்ணைப்புரம் கிராமத்தின் ஓடைகளிலும், சாலைகளிலும், மாந்தோப்புகளிலும் நான் கத்திய கத்தல்கள் ! மூங்கிலில் நானாக ஓட்டை போட்டு புல்லாங்குழலில் ஊதிய ஊதல்கள்! மாலை வேளைகளில் நான் மனம் போனபடி பாடிக்கொண்டே நடப்பேன். அது எனக்கு இன்பமான அனுபவம். அந்தக் கிராமத்தின் அழகையும், அமைதியையும் எங்கள் இளைஞர் குழு எவ்வளவு கெடுதிருந்தது என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது " என்று "சங்கீதக் கனவுகள்" என்ற நூலில் ( கலைஞன் பதிப்பகம் 1984 ) குறிப்பிட்டார்.
எட்டாவது படித்தார் .அதற்குமேல் படிக்க வசதி இல்லை. எங்கள் அண்ணன் பாவலர் வரதராசன் அவர்கள் நாடகக் குழு வைத்து நடத்தி அதனால் ஏற்ப்பட்ட நட்டத்தை ஈடு செய்வதற்காக எங்கள் தந்தையார் சேர்த்து வைத்திருந்த ஏலக்காய் எஸ்டேட்,தோட்டங்கள் போன்ற சொத்துக்களை அப்போதுதான் விற்றுக் கடனை அடைத்துவிட்டுக் கேரளா சென்று கம்யூனிஸ்டு கட்சியின் தொண்டனாக வேலைசெய்து வந்தார். எனவே அவராலும் என்னை மேற்க்கொன்டு படிக்கவைக்க முடியவில்லை.
1958 ம் ஆண்டு,பாவலர் வரதராசனுக்கு திருச்சியில் ஒரு இசைநிகழ்ச்சி இருந்தது.அனால் அவர் உடல்நிலை சரி இல்லை. "ராஜாவை அழைத்துக் கொண்டு போ....இடைக்கிடையே ஓரோர் பாடலை அவன் பாடினால் உனக்கு கொஞ்சம் ஓய்வாவது கிடைக்குமே என்று அவர் தாயார் கூறியிருக்கிறார்.என் அன்னையின் திருவாக்கினால் தான் என் கலை வாழ்க்கை ஆரம்பமானது, அன்று பொன்மலையிலும்,திருவெறும்பூரிலும் நடந்த அந்த இசை நிகழ்சிகளில் அவ்வளவு பெரிய கூட்டம். எனக்கும் என் பாட்டுக்கும் மக்கள் கை தட்டியது என்னை எங்கோ கொண்டுபோய்விட்டது.
காவேரி ஆற்றின் குளியலும் உச்சிப்பிளையார் கோவில் உயரத்தில் இருந்து பார்த்தபோது ஆர்பரித்து ஓடிய காவிரியின் கண் கொள்ளக் காட்சியும் பாட்டுக்குக் கிடைத்த கைதட்டல்களுடன் சேர்ந்துகொண்டன.
"வானுயர்ந்த சோலையிலே,நீ நடந்த பாதையெல்லாம் நானிந்ருது வாடுகிறேன், நாவரண்டு பாடுகிறேன் " என்று சொத்துபத்துக்களை நாடகம் போட்டு இழந்திருதாலும், இலட்சியத்தை இழக்காத அண்ணன் காட்டிய பாதையில் நடந்தது ஒரு பாடமாக மட்டும் இல்லாமல் ஒரு தவமாக அமைந்திருக்க வேண்டும். பின்னணியில் "மாட்டுவண்டி போகாத ஊருக்கெல்லாம் எங்கள் பாட்டுவண்டி போயிருக்கு" என்று இளையராஜாவால் கூறமுடிந்தது.
ஒரு கச்சேரிக்கு நாப்பது ருபாய் சம்பளம், சில ஊர்களில் அது கூட கிடைக்காத நிலை, என்ற நிலை 1958 - 68 இந்த காலக்கட்டத்தில் தொடர்ந்திருக்கிறது. அதன் பிறகு பாட்டு கேட்பதற்காக வாங்கி இருந்த வானொலியை விற்று விட்டு இளையராஜா தன சகோதரர்களுடன ( பாஸ்கர், கங்கைஅமரன் )சென்னைக்கு ரயில் ஏறினார்.
வடக்கே போகும் ரயில்!
பயணங்கள் முடிவதில்லை.....
குறிப்பு:
படிப்பதுடன் நின்றுவிடாது எங்களுக்கும் இரண்டு வரி எழுதுங்கள். அதுதான் எங்கள் ஊக்கம் .
நன்றி !
SRDT GROUP'S
இப்படிக்கு
கொள்ளுசாக்கு
எழுத்து வடிவம்,
இலக்கிய ராஜா
மருதுபாண்டியன்
செயல் வடிவம்,