(இசைராஜா) இளையராஜா ஓர் இசைப்பயணம்
பகுதி -2
ஆசிரியர்:வாமனன்

 

     இளையராஜாவின் நண்பராகிய சின்னச்சாமி (பாரதிராஜா) நான்கு ஆண்டுகளுக்கு முன்பே சென்னை வந்திருந்தார் (வாய்ப்புகள் தேடி) அவருடைய இருப்பிடத்திற்கு விட்டார்கள்....... சவாரி.


 
     "ஒரு கையில் ஆர்மோனிய பெட்டி,இன்னொரு கையில் எட்டு ருபாய்".இந்த கோலத்தோட நீயும் உன்னோட அண்ணன் பாஸ்கரும் வந்து சேர்ந்து மெட்ராஸ் என்கிற நினைப்பே இல்லாம,பிரியானி தின்னனும்பீங்க!எனக்கு அப்போ சம்பளம் 85  ருபாய்.அதிலே உங்களுக்குப் பிரியானி வாங்கி கொடுத்துட்டு நான் என்ன பண்றது.அப்போ இருந்த பொருளாதார சூழலில் ஒரு காபியை ரெண்டு பேரு குடிச்சாத்தான் சரியா வரும்.ஆனால் அண்ணனும், தம்பியும் முழு காபிதான் வேணும்பீங்க...."என்று ஆரம்ப கால நிலையை வெற்றி,அடைந்த காலத்தில் இளையராஜாவுடன் ஒரு கலந்துரையாடலில் பாரதிராஜா பகிர்ந்து கொண்டார்.
 
     முழுக்காப்பியும்,பிரியானியும் கேட்டவர்களை முலுப்பட்டினியும் வருத்தாமல் இல்லை.அந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு முந்திய நான்கு நாட்கள் குலைப்பட்டினி.பூஜை அன்று பாரதிராஜா வேலைப்பார்த்த பெட்ரோல் பங்கிலிருந்து வந்த பொட்டலம் தான் உண்ணாவிரதத்தை முடிச்சு வைத்தது.(இளையராஜா-பாரதிராஜா உரையாடல்,பேசும் படம் டிசம்பர் 1977
 
     இதற்கிடையில் இளையராஜவிற்கு ஒரு பிளாஷ்பேக்.திருச்சி பொன்மலையில் இசை நிகழ்ச்சி கொடுத்த போது,அவர்கள் பாடிய பாடல்களை ஒரு வீட்டு மாடியில் இருந்து கேட்டிருந்தார் M.S விஸ்வநாதன்.தனது மெட்டில் சமுதாயக் கருத்துகளைப் புகுத்தி பாடியவர்களைத் தன்னிடம் அழைத்து வரச் சொன்னாராம் அவர்.ஆனால் எப்படியோ அந்த சந்திப்பு நடைபெறவில்லை.சென்னை வந்ததும் M.S.V-யின் ஆசிகளை வாங்க நினைத்தார் இளையராஜா.ஒரு வெள்ளிக்கிழமை அவரைப் பார்க்க அனுமதி கிடைத்தது.காத்திருக்கும் போது விஸ்வநாதனைக் காண வந்திருந்த கூட்டம் பெருகிக் கொண்டே போனது.
 
     தன்னை அழைத்துச் சென்று பூஜை அறையில் ஆசிகள் கூறுவார் என்று எதிர்பாத்திருந்தார் இளையராஜா.அடுத்த வெள்ளி வா......ஆசிர்வாதம் செய்கிறேன் என்றாராம் M.S.V.ஆனால் அடுத்த வாரம் சென்றும் அது நடக்கவில்லை.இசைக்குழுவில் இடமோ,இசைப்பயிற்சியோ எதிர்ப்பார்த்துச் செல்லவில்லை.இசை மேதையிடம் ஆசிபெறச் சென்றோம்,அது நடக்கவில்லையே என்று  மனம் வாடியது.அவர் இவ்வளவு தூரம் பேசியதே பாக்கியம் என்று மனதைத் தேற்றிக் கொண்டார்.(M .G வல்லபன் கட்டுரை)
 
     சென்னை மயிலைப் பகுதியில் லஷ் கார்னரில் உள்ளது சாய் லாஜ்.ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன் அதன் செங்குத்தான படிக்கட்டுகளைக் கடந்து சென்று அறை காலி இருக்கிறதா என்று நீங்கள் கேட்க நேர்ந்திருந்தால் இப்பகுதியில் ஒரு அறையில் இருந்து வாத்திய இசை வெளிவருவதைக் கேட்டிருக்கலாம்.
 
     கிடார் இசையும்,டிரம்ஷூகளின் ஒலியும்,பியானோவின் மேல்லோசைகளும் 13 வது எண் அறையிலிருந்து வந்தபடி இருக்கும்.(இன்றைக்கு அறை எண்ணும்,அதைச் சுற்றியுள்ள அமைப்புகளும் வெகுவாக மாறிவிட்டன....வெளியில் சாலையில் விரைந்து கொண்டிருக்கும் வாகனங்களின் ஒலிதான் சிலசமயம் கேட்கும்....) 
 
தன்ராஜ்: திரை இசைவாணர்களின் திசை காட்டி 

     அந்தக் காலத்தில் திரை வாத்திய கலைஞர்கள் பலர்,சாய் லாட்ஜின் படிகளில் ஏரியவர்கள் தான்.அந்தப் படிகள் தான் அவர்களது இசை அறிவின் வெளிச்சமாக விளங்கியது.அந்த வெளிச்சம் தான் அந்த அறையின் நாடு  நாயகமாக விளங்கிய தன்ராஜ்.
 
     மதுரமான ஸ்வரங்களையும்,மதுவையும் விரும்பிய விசித்திர மனிதர் தன்ராஜ்.மேற்கத்திய இசைக்  கடலின் அகல,நீளங்களை அளந்து துரதிஷ்ட்டப் புயலில் சிக்கிய மரக்கலமாய் ரூம் நம்பர் 13-ல் ஒதுங்கி பலருக்கு கலங்கரை விளக்கமாய் திகழ்ந்தவர்.இவருடைய பட்டறையிலே உருவான எண்ணிக்கையில் அடங்காதவர்களில் R.பார்த்தசாரதி (அவன் பித்தனா,கல்யாண ஊர்வலம்-கூந்தலிலே நெய் தடவி) ஷியாம் (கருந்தேள் கண்ணாயிரம்-மந்தவெளியிலே ஒரு பெண் பின்னாலே) தேவதை (கலீர்,கலீர் L .வைத்தியநாதன்,ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.T.K ராமமூர்த்தியும் தான்ராஜிடம் மேற்கத்திய இசை நுணுக்கங்களை அறிந்ததுண்டு.
 
     நடுத்தர உயரம்,மாநிறம்,சாதாரண உடல்வாகு,மூட் நன்றாக இருந்தால் வெண்ணிற அரைக்கை சட்டை,வேட்டி,வாயில் சுருட்டு அல்லது சார்மினார் புகைய சாய் லாட்ஜின் அலுவலக அறைப்பக்கம் எட்டிப் பார்ப்பார்,இனக்கமாக பேசுவார் தன்ராஜ்.
 
     சென்னை வெயில் சாதாரணமானவர்களை கூடுதலாக வாட்டும்,வெயில் படபடக்கும்,வெப்பம் கொழுந்துவிடும்,நெய்யை நெருப்புருக்கும் தார் போட்ட நெடுவீதி,இருபுறமும் மச்சு மச்சாய் கட்டிடங்கள் பல.வட பழனியிலிருந்து நடந்தே வந்திருந்த இளையராஜாவைத் தொடர்ந்து வரும் வெப்பம் (வட பழனி-லஸ் கார்னர்,10-12 கி.மீ தூரம் வெயில் காலத்திய நடை என்பது எவ்வளவு கொடுமை என்று அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.)
 
     வாய்ப்பு  கேட்கச் செல்லும் சினிமா கம்பெனிகளின் நிராகரிப்பு,மெல்லிசை நிகழ்ச்சிகளில் வாசிக்கச்  செல்லும் போது பிரபல கலைஞர்களின் அவமதிப்பு வயிற்றில் அடிக்கடிக் கொழுந்துவிட்டெறியும் பசித்தீ என்று உயிரை வாட்டிய  நெருப்புகளுக்குப் பஞ்சம் இல்லை.தோற்றத்தில் சாதாரணமானவராகவும் இருந்தவருக்கு சாய் லாட்ஜில் தன்ராஜின் வரவேற்பு கிடைத்தது.
 
ஏற்றிவிட்ட சாய் லாட்ஜின் படிக்கட்டுகள்

      முதல் படத்திலேயே (அன்னக்கிளி) தனித்துவம் மிக்க இசைச் சேர்ப்புகளைச் செய்தவர் என்ற பெருமையை அடைவதற்கும்,வாத்தியங்களை ஒருங்கினைப்பு செய்வதில் வல்லவரான இசை அமைப்பாளர் என்ற பெயர் பெறுவதற்கும்,சிம்போனி வரை சென்ற ஒரே இசை அமைப்பாளர் என்ற தகுதி கிடைப்பதற்கும்,சாய் லாட்ஜின் படிக்கட்டுகள்தான் இளையராஜாவிற்கு ஏணிப்படிகளாக அமைந்தன.
 
     இசையின் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுத்தந்தார்.பியானோ கற்றுக் கொள்வதர்காக நான் அவரிடம் சேர்ந்தேன்....எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்ட அவர் அதைக்கற்றுக்கொள்,இதைக்கற்றுக்கொள் என்று கொஞ்சம், கொஞ்சமாக எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.....வாரத்தில் இரண்டு நாள்,இரண்டு மனி  நேரம் பயிற்சி பெற சேர்ந்திருந்த நான் "தினமும் வருகிறேன்" என்றேன்....."சரி வா" என்றார்......(சங்கீதக் கனவுகள்-இளையராஜா)
"வருமானம்  இல்லாத நிலையில் இருந்த என்னிடம் அவர் பணமே வாங்கல"
 
திரை உலகில் திறந்த வாயில்

     தன்ராஜிடம் இசை பயின்று வந்த இளையராஜாவிற்கு அந்தப் பலத்தின் காரணமாகத் திரை உலகில் ஒரு நுழைவாயில் திறந்தது.விஸ்வநாதனிடம் கிடைக்காத வாய்ப்பு,ஆரம்ப காலத்திலிருந்தே அவரது நண்பரும் பிறகு உதவி இசை அமைப்பாளராகவும் இருந்த G.K வெங்கடேஷிடம் இளையராஜாவிற்குக் கிடைத்தது.முதலில் அதுவும் கூட ராஜபாட்டையாக அமையவில்லை.இளையராஜாவின் எளிய தோற்றத்தையும்,பின்னணியையும் கண்டு வெங்கடேஷ் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தரவில்லை.ஆனால் அவர் கையில்(தன்ராஜிடம் கற்ற)சரக்கு இருந்தது.முன்னுக்கு வர வேண்டும் என்ற தாகத்தில் அவ மரியாதைகளை அசட்டை செய்யும் தன்மை இருந்தது.வெங்கடேஷின் வளர்ப்பு மகனும் வயலின் கலைஞருமான வித்யாதரின் நட்ப்பு இருந்தது.வெங்கடேஷிடம் ஏகப்பட்ட கன்னடப் படங்களும்(அந்தக் காலத்தில் கன்னடத் திரையுலகம் பெங்களூருக்கு குடி பெயர்ந்திருக்கவில்லை) ஒரு சில தமிழ்ப் படங்களும் கைவசம் இருந்தன.(பொண்ணுக்கு தங்கமனசு......,தேன் சிந்துதே வானம்,நெஞ்சில் ஒருமுள்-ராகம் புது ராகம்)காஷ்மீர் காதலி-அழகிய செந்நிற வானம்) 


 
தோழர்கள் மீட்கவில்லை,சோதரர்கள் மீட்டனர்

     பிழைப்பைத் தேடி தம்பிகள் சென்னை சென்றுவிட்ட நிலையில் தோழர் வரதராசனின் வாழ்க்கை அதன் அந்திமக் கால கழிப்புகளைக் கண்டு கொண்டிருந்தது.தீவிரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டு,கொலை மிரட்டல்களையும்,பொய் வழக்குகளையும் அவர் சந்தித்துக் கொண்டிருந்தார்.கடைசியில் சிறையிலடைக்கப்பட்டார்.
 
     தன் வாழ்க்கையையே மக்களுக்கு அர்ப்பணித்த ஒரு உன்னதமான கலைஞனின் கடைசிக் காலம் கல் நெஞ்சத்தையும் கரைக்கும்.ஒரு கலைஞனின் ஆட்சியில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நேரத்தில் எந்த கட்சிக்காக அவர் பாடினாரோ அந்த கட்சியிலிருந்து அவருக்கு ஜாமீன் கொடுக்க எந்த தலைவரும் வரவில்லை,தொண்டரும் வரவில்லை. அவருடைய தம்பிகள் தான் அவரை வெளியில் கொண்டு வந்தார்கள்.
 
     பாவலருடன் ஊர் ஊராகச் சுற்றும் போது அவர் கோவில்களுக்குச் சென்றதுண்டு.கும்பிட அல்ல,கலையை ரசிக்க.பிறகு ஏற்ப்பட்ட மாற்றங்களால் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றார்.1974-ல் நான் கோயிலுக்கு போறப்ப முதல் படியிலே நான் காலடி எடுத்து வச்சவுடன் "ஷாக்" மாறி இருந்தது.உள்ளே மனசுக்குள் ஒரு அழுத்தம் அந்த எடத்திலேயே செல மாறி நின்னு இது என்னமோ  போல இருக்குனு ஒரு தேடல் ஆரம்பிச்சது....."அந்தம்மா மேலே ஒரு பெரிய நம்பிக்கை வந்தது......" பின்னாளில் ஜிப்பா-வேட்டி,மலித்த தலை சகிதமான கோலமெல்லாம் வராத காலத்திலேயே உள்ளே இளையராஜா மாற ஆரம்பித்திருந்தார்.
 
     வெங்கடேஷின் இசைக் குழுவில் சேர்ந்த பின் அவருடைய ஏழ்மை நிலைமையும் மாற ஆரம்பித்தது.அவரது திறமைக்குச் சரியான களம் கிடைத்திருந்தது.வெங்கடேஷின் இசைக் குழுவில் புல்லாங்குழல் வாசித்த முன்னணி வாத்தியக்கலைஞர்  சுதாகர் கைபா.அந்த நாள் இளையராஜாவின் செயல்பாடுகளை விளக்கினார்......நான் மீன் வளத்துறையில் வேலை பார்த்து வந்தேன்........மாலை வேளைகளில் நேரம் கிடைக்கும் போது G.K. வெங்கடேஷின் குழுவில் புல்லாங்குழல் வாசித்து வந்தேன்.அன்று இளையராஜா-அப்போது நான் அவரை ராஜா என்றுதான் அறிவேன்.வெங்கடேஷின் கம்போசிங் அசீஸ்டென்டாக இளையராஜா வேலைபார்த்தார்.HE WAS DOING VERY EFFICIENT WORK........அவர் மிகத்திறமையாக செயல் பட்டு வந்தார்..............

     கம்போசிங் அசிஸ்டென்ட் என்ற முறையில் என்ன செய்தார்................ இளையராஜா?
 

குறிப்பு:
     படிப்பதுடன் நின்று விடாதிர்கள்......எங்களுக்கு இரு வரி விமர்சனம் செய்யுங்கள்.....அதுதான் எங்கள் பணிக்கு ஊக்கம் என்பதை மறந்து விடாதிர்கள் 
 
பயணங்கள் முடிவதில்லை

இப்படிக்கு:

கொள்ளுச்சாக்கு 
 
எழுத்து வடிவம்:

மருது பாண்டியன்
நித்யானந்த (மொசமுட்டி)
 
செயல் வடிவம்:
பரிதி இளம் வழுதி