தூக்குமரத்தை தூக்கிலிடுங்கள்
பேரறிவாளன்,முருகன், சாந்தன் ஆகியோர் தண்டனையைக் குறைக்கச் சொல்லி அறிக்கை விடுத்த"தமிழர்
தலைவர்"?கருணாநிதி,இது கடிதம் அல்ல,கருணை மனு என்று இப்போது நீலிக்கண்ணீர் வடிப்பது
வேடிக்கையாகவும்,ஏளனமாகவும் இருக்கிறது.அவர்முதலமைச்சராக இருந்த போது,இதே மூவரும் அனுப்பிய கருணை மனுவை வெறும் கடிதமாகத்தான் பார்த்தார் இன்று இவரது கடிதத்தை கருணை மனுவாக பார்க்கவேண்டும் என்கிறார்.
"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டையே"இனத்தையே வெறும் வார்த்தை ஜாலங்களில் இனியும் இந்த இனத்தை ஏமாற்ற முடியாது.தமிழன் விழித்துக்கொண்டான்.
"தூக்குமரத்துக்குதூக்கிலிடும் காலம் எப்பொழுதோ!"பரவலாக மக்களிடையே,பெருக்கெடுக்கும் உணர்வுகளுக்கும் ,
அபிப்ராயத்துக்கும் உரிய மதிப்பு அளித்து தண்டனையை குறைப்பதில் தவறில்லை,குற்றம் சாட்டப்பட்டவர் மீது அனுதாபத்தையும்,சட்டத்தின் மீது எதிர்ப்பு உணர்வையும் எழச்செய்யும் தண்டனையால் சமுதாயத்துக்கு நன்மையைவிட தீமையே வந்து சேரும் (law commission report 328) என்று சட்டக்கமிசன் அறிக்கை சொல்கிறது.
ஒருவருக்கு மரண தண்டனையைஉறுதி செய்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பும் தண்டனையை நிறைவேற்றாவிடில் அதை ஆயுள் தண்டனையாக மாற்றிய தீர்ப்புகள் பல உண்டு.
மேற்கண்ட மூவரும் இருபது ஆண்டுகளுக்கு மேல் சிறைக்குள்ளேயே வாழ்வின் வசந்தமான இளமையை முற்றாக இழந்து விட்டார்கள்.அதைவிட முருகன் தான் மகள் ஹரித்ராவை பார்த்து தான் பாசத்தைக்கூட காட்டமுடியாமல் புத்திர சோகத்தில் துடிப்பது யாருக்கு தெரியும்.
ஒரு மனிதன் வீதியில் அடிபட்டு விழுந்துகிடந்தால்,விழுந்துகிடப்பவன் வேறு யாரும் அல்ல;அது நான் என்று உணர்பவனே வைணவன் என்கிறது ராமனுஷ தரிசனம்.சிலுவையில் அறைந்தவர்களுக்கு பாவ மன்னிப்பு வேண்டிய பெருங்கருனையாளர் கர்த்தர் இயேசு.தன்னுடைய சிறிய தந்தை ஹம்சாவின் உடலைப் பிளந்து ஈரலைச் சுவைத்த ஹிந்தாவையும்,அருமை மகள் ஜைனப்பை ஈட்டியால் குத்திய ஹப்பாரையும் கைபர் விருந்தில் நஞ்சு கலந்த யூதப் பெண்ணையும் மன்னித்த அருளாளர் நபிகளார்.கோட்சேவையும் மன்னிக்கும் மனம் கொண்ட காந்தியின் பெயரில் கடை விரித்து காசு பார்க்கும் நம் உள்ளூர் காங்கிரஸ்காரர்களுக்கு மட்டும் மன்னிக்கும் மனோபாவம் வாய்க்கவே இல்லை "சட்டம் தன்கடமையைச் செய்யட்டும் என்பவர்கள் சட்டம் ஒழுங்காக கடமையைச் செய்திருந்தால் பல சங்கடங்களுக்கு ஆளாகியிருப்பார்கள்.
தமிழின விரோதிகள் இன்று ஆதரிப்பாறற்ற அரசியல் அனாதைகள் ஆகிவிட்டனர்.காங்கிரசைத் தவிர அனைத்துக் கட்சிகளும் மூவர் விடுதலைக்காக ஆதரவாக குரல் கொடுத்திருப்பதை இந்த நாடறியும்.தூக்கு தண்டனை உலகத்தில் 139 நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முனரே தூக்கில் இட்டுவிட்டார்கள்.
"வாழ்க்கை புனிதமானது,அதை பறிப்பது அரக்கத்தனமானது"என்ற சட்டமேதை கிருஷ்ண அய்யரின் அர்த்தமுள்ள வாசகங்கள் உயிர் பெற வேண்டுமென்பதே அவா.
சிறுத்தை கொல்லுதல்
தடுக்கும் சட்டம்
மான் வேட்டையை
ஒடுக்கும் சட்டம்
மரத்தை வெட்டுதல்
தடுக்கும் சட்டம்
மாந்தன் உயிர் மலிவோ
"அக்றிணை மேலோ
உயர்திணை தாழ்வோ"
தூக்கு மரத்தை தூக்கிலிடுங்கள்
அன்பின் புத்தர் தோன்றிய மண்ணில்
உத்தமர் காந்தி உதித்த மண்ணில்
சித்தர் வள்ளலார் சிலிர்த்த மண்ணில்
தூக்கே நீ தேவையோ?
ஆதலினால் தூக்கு மரத்தை தூக்கிலிடுங்கள்.
இப்படிக்கு
கொள்ளுசாக்கு
எழுத்து வடிவம்
இலக்கிய ராஜா
மருது பாண்டியன்
BY
SRDT GROUPS
செயல் வடிவம்
பரிதி இளம் வழுதி
ஒருங்கிணைப்பாளர்